ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதுவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தவறியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் மைக்கேல் ஷூபிரிட்ஜ் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் கிட்டத்தட்ட 50 நாடுகளுக்கு தூதுவர்களை நியமித்திருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கான இடம் இன்னும் வெற்றிடமாகவே உள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மைக்கேல் ஷூபிரிட்ஜ் கூறுகையில் ,
பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் நேரடி விவாதங்களை நடத்த முடியாதபோது இந்த பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.