நியூசிலாந்தில் InterCity பேருந்தின் லக்கேஜ் பெட்டியில் சிக்கிய சிறுமியை ஓட்டுநர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சூட்கேஸில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த சிறுமி ஒரு ஜோடி காலணிகளும் டயப்பரும் மட்டுமே அணிந்திருந்தார். சந்தேகத்திற்கிடமான சத்தம் கேட்டதை அடுத்து ஓட்டுநர் சூட்கேஸைச் சரிபார்த்துள்ளார்.
பின்னர் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, 27 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு குழந்தையை மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் அந்தப் பெண் நார்த் ஷோர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.