Malmsbury இளைஞர் மையத்தில் நடந்த கலவரத்திற்கு விக்டோரியன் நீதி மற்றும் சமூக பாதுகாப்புத் துறையே காரணம் என்று WorkSafe குற்றம் சாட்டுகிறது.
ஒக்டோபர் 2023 இல் நடந்த மோதலின் போது, ஒரு இளைஞர் நீதித்துறை ஊழியரும் பல இளைஞர்களும் தாக்கப்பட்டனர்.
இது தொடர்பாக WorkSafe துறைக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
பாதுகாப்பான பணிச்சூழலை வழங்கவும் பராமரிக்கவும் தவறியது மற்றும் ஊழியர்கள் அல்லாத பிற நபர்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்யத் தவறியது ஆகியவை குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
இந்த மையம் டிசம்பர் 2023 இல் மூடப்பட்டது.
இதற்கிடையில், விக்டோரியா அரசு இதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.