இந்திய நடிகை தீபிகா படுகோன் Instagram-இல் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
தீபிகா படுகோனின் காணொளி Instagram-இல் 1.9 பில்லியன் பார்வைகளுடன் அதிகம் பார்க்கப்பட்டதாக மாறியுள்ளது. இது தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட காணொளியாக மாறியுள்ளதோடு அதிகமான பார்வைகளையும் பதிவு செய்துள்ளது.
ஹோட்டல் ஹில்டனுடன் கட்டண கூட்டாண்மையின் (paid partnership) ஒரு பகுதியாக ஜூன் 9 அன்று வெளியிடப்பட்ட இந்த காணொளி, Instagram-இல் முந்தைய அனைத்து பார்வையாளர்களின் சாதனைகளையும் முறியடித்துள்ளது.
இந்த காணொளி “It Matters Where You Stay” என்ற தலைப்பில் ஹில்டனின் உலகளாவிய பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். இதில் படுகோன் பிராண்ட் தூதுவராக பணியாற்றுகிறார்.
இந்த காணொளி இரண்டு மாதங்களுக்குள் இந்த மைல்கல்லை எட்டியது. ஹர்திக் பாண்ட்யா மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட பிற உயர்மட்ட நபர்களின் உள்ளடக்கத்தையும் இக் காணொளி முந்தியுள்ளது.
இதற்கு முன்பு, அதிகம் பார்க்கப்பட்ட காணொளிகளில் பாண்டியாவின் BGMI கூட்டாண்மை வீடியோ 1.6 பில்லியன் பார்வைகளுடன் மற்றும் ஸ்மார்ட்போனுக்கான விளம்பர காணொளி 1.4 பில்லியனுடன் அடங்கும்.