மெல்பேர்ணின் தனித்துவமான வானிலை முறைகளுக்கு ஏற்ப வருடாந்திர சுழற்சியில் மேலும் இரண்டு பருவங்களைச் சேர்க்க வேண்டும் என்று மெல்பேர்ண் லார்ட் மேயர் Nicholas Reece அழைப்பு விடுத்துள்ளார்.
ஆறு பருவங்களைப் பிரிக்கும் நடவடிக்கை Wurundjeri பழங்குடி மக்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப உள்ளது என்று அவர் கூறுகிறார்.
மெல்பேர்ண் நகரின் உண்மையான வானிலை முறைகளுடன் இது சிறப்பாகப் பொருந்துகிறது என்றும் மேயர் சுட்டிக்காட்டுகிறார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற மெல்பேர்ண் 2050 மாநாட்டில் இந்த யோசனை அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு கிட்டத்தட்ட 1,000 பேர் நகரத்தின் எதிர்காலம் குறித்து விவாதித்தனர்.
மெல்பேர்ண் சிங்கப்பூரின் கட்டமைப்பைப் பின்பற்ற வேண்டும் என்றும், பாரம்பரிய கோடை, குளிர்காலம், இலையுதிர் காலம் மற்றும் வசந்த காலங்களுக்குப் பதிலாக பருவமழை போன்ற வானிலை முறைகளால் தீர்மானிக்கப்படும் பருவங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
- வறண்ட காலம் (Dry Season) – ஜனவரி, பெப்ரவரி
- விலாங்கு மீன் பருவம் (Eel Season) – மார்ச்
- வொம்பாட் பருவம் (Wombat Season) – ஏப்ரல் – ஜூலை
- ஆர்க்கிட் பருவம் (Orchid Season) – ஆகஸ்ட்
- டாட்போல் பருவம் (Tadpole Season) – செப்டம்பர், ஒக்டோபர்
- கங்காரு ஆப்பிள் சீசன் (Kangaroo Apple Season) – நவம்பர், டிசம்பர்