மெல்பேர்ணில் உள்ள ஒரு பல் மருத்துவமனை மீது கார் ஒன்று மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
காவல்துறையினர் வாகனத்தை நிறுத்த முயன்றபோது, அது மருத்துவமனை இருந்த கட்டிடத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
குறித்த நேரத்தில் காரில் 5 பேர் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தால் சிறு காயங்களுடன் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவர் தப்பி ஓடிவிட்டனர்.
விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.