வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 33 பேர் காணாமல் போயுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மலைப்பகுதிகளில் வசிக்கும் 4,000க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
காணாமல் போனவர்களை மீட்க அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
குவாங்டாங் மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன ஏழு பேரும் இறந்துவிட்டதாக சிசிடிவி அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையில், பெய்ஜிங் பொருளாதார திட்டமிடல் ஆணையம் கன்சு மாகாணத்தில் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக 100 மில்லியன் யுவான் (US$21.3 மில்லியன்) ஒதுக்கியுள்ளது.