Newsநிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

-

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது வீட்டிலிருந்தபோதே Jim காலமாகியுள்ளார்.

1968 ஆம் ஆண்டு அப்பல்லோ 8 விண்கல பயணத்தில் Jim தலைமை தாங்க நாசா வீரர்கள் விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

புவியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி மனிதர்கள் முதன்முறையாக விண்வெளிக்கு மேற்கொண்ட அந்த பயணம் வரலாறு படைத்தது.

இவர்கள் பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு 10 தடவை நிலவை சுற்றி வந்தனர்.

அவரது வாழ்நாளில் நான்கு தடவைகள் அவர் விண்வெளி பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அவரது மறைவுக்கு நாசா விண்வெளி மையம் வருத்தம் தெரிவித்துள்ளது.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...