தென்மேற்கு குயின்ஸ்லாந்து ஷையரின் குடிநீர் விநியோக நிலையத்தில் மூளையை உண்ணும் ஒரு அரிய மற்றும் ஆபத்தான அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Charleville மற்றும் Augathella-இற்கான குடிநீரில் Naegleria fowleri என்ற நச்சுப் பொருள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, Murweh Shire கவுன்சில் ஒரு பொது சுகாதார அறிவிப்பை வெளியிட்டது .
இந்த ஆபத்தான அமீபா இயற்கையாகவே சுத்திகரிக்கப்படாத நன்னீர் மற்றும் மண்ணில் காணப்படுகிறது, 25 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் இது வாழும்.
இது மிகவும் அரிதான ஆனால் தீவிரமான மூளைத் தொற்றை ஏற்படுத்தும், இது முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் ஆகும்.
அசுத்தமான நீரில் குடிப்பதாலும், சமைப்பதாலும், துணிகளைத் துவைப்பதாலும் தொற்று ஏற்படாது. சுத்திகரிக்கப்படாத நீர் மூக்கில் நுழைந்து மூளையை அடையும் போது மட்டுமே இது நிகழ்கிறது.
குழந்தைகள் மூக்கில் தண்ணீர் ஏறாமல் பார்த்துக் கொள்ளவும், நகர நீர் நிரப்பப்பட்ட குளங்களில் தலைகளை நீருக்கடியில் வைக்க வேண்டாம் என்றும், மூக்கு பாசனத்திற்கு தண்ணீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் குயின்ஸ்லாந்து சுகாதாரம் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.