நேற்று இரவு பிரிஸ்பேர்ணுக்கு தெற்கே நடந்த ஒரு சமூக கண்காட்சியில் பட்டாசு வெடித்ததில், குழந்தைகள் சிறு சிறு பட்டாசு துண்டுகளால் தாக்கப்பட்டனர் மற்றும் ஒருவருக்கு காலில் தீக்காயங்கள் ஏற்பட்டன.
இந்த விபத்தால் Jimboomba Family Carnival-இல் கலந்து கொண்டவர்கள் மீது வெடிபொருட்கள் ராக்கெட் வேகத்தில் பாய்ந்தன.
காலில் தீக்காயங்கள் ஏற்பட்ட அந்த நபருக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு முதலுதவி அளிக்கப்பட்டது.
இன்றிரவு திட்டமிடப்பட்டிருந்த வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறாது என்பதை கார்னிவல் சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தியது.
கண்காட்சி ஏற்பாட்டாளர் Paul Watkins இந்த்ச் வெடிவிபத்து குறித்து மன்னிப்பு கேட்டார். “நாங்கள் மிகவும் வருந்துகிறோம், அது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்று நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து குயின்ஸ்லாந்தால் ஒரு விசாரணை நடந்து வருகிறது.