குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் தனது உள்ளாடைகள் மற்றும் காலணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தாவரங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரிஸ்பேர்ண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 14 உயிரியல் பாதுகாப்பு குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் அவர் நன்னடத்தை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பெப்ரவரி 2021 மற்றும் மார்ச் 2024 க்கு இடையில் பல சந்தர்ப்பங்களில் அந்தப் பெண் இறக்குமதி செய்த கற்றாழை மற்றும் சதைப்பற்றுள்ள தாவரங்களை உயிரியல் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர்.
நவம்பர் 2023 இல், ஹாங்காங்கிலிருந்து விமானம் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட 57 வகையான தாவரங்கள் சிட்னியில் கைப்பற்றப்பட்டன, மேலும் பிரிஸ்பேர்ணில் உள்ள ஒரு நர்சரியில் இருந்து மேலும் 50 சதைப்பற்றுள்ள தாவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் அந்தப் பெண், இந்தச் செடிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, தனது ஆன்லைன் வணிகமான Rockford Plant House மூலம் விற்றதாகக் கூறினார்.