பெர்த்தில் உள்ள Wooroloo சிறைச்சாலையில் உள்ள ஒரு குழு கைதிகள், விலங்குகள் காப்பகத்தில் இருந்து எடுக்கப்பட்ட கினிப் பன்றிகளை சாப்பிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மேற்பார்வையின் கீழ் ஒரு பண்ணையில் நடத்தப்பட்ட பிரிவு 95 என்ற திட்டத்தில் கைதிகள் ஈடுபட்டுள்ளதாகவும், பின்னர் விலங்குகள் கொல்லப்பட்டு உண்ணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலைக்கு வெளியே உள்ள ஒரு சேமிப்பு அறையில் கினிப் பன்றிகளின் உடல் பாகங்களை சிறை ஊழியர் ஒருவர் கண்டுபிடித்ததாக மேற்கு ஆஸ்திரேலியா நீதித்துறை சேவைகள் ஆணையர் பிராட் ராய்ஸ் கூறுகிறார்.
பிரிவு 95 இன் கீழ் உள்ள அனைத்து திட்டங்களும் தற்போதைக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்தார்.
நீதித்துறை கொள்கையின் கீழ், பிரிவு 95 திட்டத்தில் பணியாற்றும் கைதிகள் அனுமதியின்றி எதையும் எடுத்துச் செல்லவோ அல்லது சிறைக்கு மீண்டும் கொண்டு வரவோ அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.