கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் இறுதிச் சடங்குகளில் காசா நகரில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கலந்து கொண்டனர்.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பிரபல Al Jazeera நிருபர் Anas Al Sharif-இன் மரணம் குறித்து இஸ்ரேல் தனது கருத்தை தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர் Anas Al Sharif ஒரு பத்திரிகையாளர் வேடமணிந்த ஒரு தீவிரவாதி என்று இஸ்ரேல் கூறியிருந்தது.
இருப்பினும், Al Jazeera ஊடகம் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதற்கிடையில், இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறலாக வர்ணித்து, ஐக்கிய நாடுகள் சபை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.