பிரிட்டனைச் சேர்ந்த 10 வயது போதனா சிவானந்தன் (Bodhana Sivanandan), கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த இளைய சதுரங்க வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
2025 பிரிட்டிஷ் சதுரங்க சாம்பியன்ஷிப்பின் இறுதிச் சுற்றில் அவர் 60 வயதான கிராண்ட்மாஸ்டர் Peter Wells-ஐ தோற்கடித்தார்.
சிவானந்தனின் வெற்றி, 10 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 20 நாட்களில் ஒரு கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த அமெரிக்க வீரரின் சாதனையை முறியடித்ததாக சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சதுரங்கத்தில், கிராண்ட்மாஸ்டர் என்பது ஒரு வீரருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும்.
ஒருமுறை பெற்றால், அந்த மதிப்பீடு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இரண்டாவது மிக உயர்ந்த தரவரிசையான Woman International Master (WIM) மதிப்பீட்டை சிவானந்தன் பெற்றுள்ளார்.
போட்டிக்குப் பிறகு, தனது எதிர்கால இலக்கு ஒரு கிராண்ட்மாஸ்டராக மாறுவதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.