இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களுக்கு எதிராக சில காலிஸ்தான் ஆதரவாளர்கள் நிலைமையை சீர்குலைக்க முயன்றனர்.
இந்திய தேசிய பாடல் ஒலித்துக் கொண்டிருந்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தங்கள் கொடியை அசைத்து கோஷங்களை எழுப்பினர்.
இதனால் இரு தரப்பினரிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பிறகு பொலிஸாரின் தலையீட்டுக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இந்திய துணை தூதரகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் போரோனியாவில் உள்ள இந்து கோவிலில் Graffiti வரைந்து அடையாளம் தெரியாத வெறுப்புணர்வை விதைத்தது குறிப்பிடத்தக்கது.