விக்டோரியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் Simpson பாலைவனத்தில் 380 கி.மீ தூரம் ஓடிய இளைய நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
26 வயதான Blake Bourne, ஆஸ்திரேலியாவின் மிகவும் கடினமான பாலைவனமான Simpson பாலைவனத்தின் வழியாக மூன்று நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து ஓடியதாகக் கூறப்படுகிறது.
மனநல தொண்டு நிறுவனமான Speak and Share-இற்கு நிதி திரட்டுவதே இதன் நோக்கமாகும்.
அவர் பல ஆண்டுகளாக மனநலப் பிரச்சினைகளுடன் போராடி வந்தார். மேலும் 2021 இல் தற்கொலைக்கு கூட முயன்றார்.
அவர் 11 வயது முதல் 18 வயது வரை மன அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொண்டதாகவும், பின்னர் 22 வயதில் சிகிச்சைக்காகத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அந்த மருந்துகள் எதுவும் பலனளிக்கவில்லை என்று அந்த இளைஞன் கூறுகிறான்.
பின்னர் அவர் ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டார். மேலும் Speak and Share-இற்கு நிதி திரட்ட தனது ஓட்டத்தைப் பயன்படுத்த முடிவு செய்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்த வலியை முடிவுக்குக் கொண்டுவர இந்த ஓட்டம் உதவியது என்று Blake Bourne கூறியுள்ளார்.