சிட்னியில் Golf மைதானத்தில் மோதிய இலகுரக விமானம் ஒன்று சிறு சேதங்களுடன் விபத்துக்குள்ளானது. இதில் சிறிய காயங்களுடன் இருவர்கள் தப்பியுள்ளனர்.
பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது, சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் விமானம் இயந்திரக் கோளாறில் சிக்கியது.
நேற்று பிற்பகல் 2.20 மணியளவில் Mona Vale Golf மைதானத்தில் ஒற்றை எஞ்சின் கொண்ட Piper Cherokee விபத்துக்குள்ளானது.
50 வயதுடைய விமானியும் அவரது மாணவரும் பெரிய அளவில் காயமின்றி உயிர் தப்பினர்.
விமானத்தின் Piper Cherokee பலத்த சேதத்தை சந்தித்தது. மேலும் விபத்துக்கான காரணத்தை விமானப் பாதுகாப்பு புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இலகுரக விமானம் இரவு முழுவதும் மைதானத்திலேயே இருந்தது. காப்பீட்டாளர்கள் இன்று அதை அகற்ற ஏற்பாடு செய்வார்கள்.