“மாநில அரசின் குற்ற மேலாண்மை ஒரு நகைச்சுவையாக மாறிவிட்டது” என விக்டோரியன் எதிர்க்கட்சித் தலைவர் Brad Battin ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் மெல்பேர்ணில் உள்ள ஒரு வீட்டில் 39 வயது நபர் ஒருவர் 11 முறை கத்தியால் குத்தப்பட்டார். கை உடைந்து முகத்தில் வெட்டுக்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
விக்டோரியாவின் ஜாமீன் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மாநில அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். இந்த விடயத்தில் கருத்து தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு பதின்ம வயதுடையவர்களும், 24 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டு, வேண்டுமென்றே வீட்டிற்குள் நுழைந்து, கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
தம்பதியினர் இருந்த அறையிலிருந்து கத்தியால் குத்தப்பட்ட நபரின் மனைவியை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, அவர்களது 2 மற்றும் 3 வயது குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
24 வயது குற்றவாளிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவரின் 69 மற்றும் 70 வயதுடைய பெற்றோர்களும் தங்கள் மகனைக் காப்பாற்ற முயன்றபோது வெட்டுக் காயங்களுக்கு ஆளானார்கள்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஒரு மூத்த துப்பறியும் அதிகாரி, இதுபோன்ற ஒரு கொடூரமான சம்பவத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றும், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என்றும் கூறியுள்ளார்.