காசா பகுதியில் உள்ள குழந்தைகளை எதிரிகள் என்று அழைத்த இஸ்ரேலிய அரசியல்வாதி Simcha Rothman, நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள யூத சமூகத்தினருடன் ஒரு மாநாட்டை நடத்துவதற்காக அவர் ஆஸ்திரேலியா வரவிருந்தார். மேலும் உள்துறை அமைச்சகத்தால் அவருக்கு விசா மறுக்கப்பட்டது.
காசாவில் குழந்தைகள் பசியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை Simcha Rothman மறுத்துள்ளார். மேலும் பாலஸ்தீன நாடு தேவையில்லை என்றும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
வெறுப்பு செய்திகளைப் பரப்புபவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை என்று உள்துறை அமைச்சர் Tony Burke கூறுகிறார்.
காசா குழந்தைகளை “சிறிய பாம்புகள்” என்று அழைத்த அமைச்சர், இஸ்ரேலிய அமைச்சரும் வழக்கறிஞருமான Ayelet Shaked மற்றும் Hillel Fuld ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைவதையும் தடை செய்துள்ளார்.