இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத் தொலைபேசி உரையாடலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் கடந்த வாரம் நடத்திய ஆலோசனையின் மதிப்பீடுகள் குறித்து பகிர்ந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையாடலில், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை பேச்சுவார்த்தை மற்றும் இராஜாங்க நடவடிக்கைகள் மூலம் முடிவுக்கு கொண்டுவருவதில் இந்தியாவின் நிலைத்தன்மை குறித்தும் மோடி குறிப்பிட்டார்.
இதற்கான அனைத்துவித முயற்சிகளுக்கும் இந்தியா துணை நிற்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு தலைவர்களும் இந்தியா – ரஷ்யா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளுக்கும் பொதுவாகவுள்ள இதர பிரச்னைகள் குறித்தும் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழன்