காசா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுடன் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக பாலஸ்தீன ஆயுதக் குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எகிப்து மற்றும் கத்தார் சமர்ப்பித்த இந்த முன்மொழிவு, ஜூன் மாதம் அமெரிக்க பிரதிநிதி Steve Witkoff முன்வைத்த கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 இஸ்ரேலிய பணயக்கைதிகள், 60 நாள் ஆரம்ப போர் நிறுத்தத்தின் போது இரண்டு குழுக்களாக விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் நிரந்தர போர்நிறுத்தம் குறித்த விவாதங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
இருப்பினும், இதற்கு இஸ்ரேலின் பதில் இன்னும் தெளிவாகக் கூறப்படவில்லை.
அனைத்து பணயக்கைதிகளும் ஒரே நேரத்தில் விடுவிக்கப்பட்டால் மட்டுமே ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் சமீபத்தில் கூறியது.
இதற்கிடையில், 22 மாத காலப் போர் ஒரு திருப்புமுனையில் இருப்பதாகவும், காசா நகரில் ஹமாஸுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் இஸ்ரேலிய இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் Eyal Zamir கூறியுள்ளார்.
இந்த வார இறுதியில் காசா நகரைக் கைப்பற்றும் இராணுவத் திட்டத்திற்கு இஸ்ரேலிய அமைச்சரவையும் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.