ரஷ்யா, யுக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் அலஸ்கா நகரில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, புடினைப் பாதுகாக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக புடினின் பாதுகாப்பு அதிகாரிகள், ஒரு பயணப்பொதி வைத்திருந்தனர்.
இது, ‘பூப் பயணப்பொதி’ (Poop suitcase) என்று அழைக்கப்படுகிறது.
ரஷ்ய ஜனாதிபதியின் மலக்கழிவுகள், பிளாஸ்டிக் பைகளில் சேகரிக்கப்பட்டு, ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்வதற்காக, இந்தப் பயணப்பொதி பயன்படுத்தப்படுகிறது.
இது, நீண்ட காலமாக உள்ள ஒரு நடைமுறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 72 வயதாகும் புடினுக்கு, நரம்பியல் நோய் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மலக்கழிவுகளில் இருந்து, புடின் உடல்நிலை குறித்து தகவல்களைப் பெறுவதைத் தடுப்பதற்காகவே, அவை சேகரிக்கப்பட்டு ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.