Newsவிமான கழிப்பறை கதவைத் திறந்த விமானி - அலட்சியமாக பதிலளித்த விமான...

விமான கழிப்பறை கதவைத் திறந்த விமானி – அலட்சியமாக பதிலளித்த விமான ஊழியர்கள்

-

IndiGo விமானத்தில், விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்து விட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தனக்கு அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

கதவைத் திறந்த இணை விமானி “ஓ” என்று சொல்லிவிட்டு உடனடியாக கதவை மூடி விட்டதாகவும், பின்னர் விமானப் பணிப்பெண்கள் இந்த சம்பவத்தை அலட்சியம் செய்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

விமான ஊழியர்களின் இத்தகைய அலட்சியமான பதில், தனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில், விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பியும், நிறுவனம் முறையாகப் பதிலளிக்கவில்லை என்றும், வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, இது ஒரு சாதாரண சிரமம் என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு இழப்பீடு வேண்டாம் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, IndiGo நிறுவனம் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...