2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது.
இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான செலவும் அடங்கும்.
ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) இன்று வெளியிட்ட புதிய தரவுகளின்படி, அது 18% அதிகரிப்பு ஆகும்.
2021-2022 ஆம் ஆண்டில் AI ஆராய்ச்சிச் செலவு $276.3 மில்லியனாக இருந்தது, இது 2023-24 ஆம் ஆண்டில் $668.3 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இந்த செலவினங்களில் மிகவும் வலுவான வளர்ச்சி தகவல் மற்றும் கணினி அறிவியல் ஆராய்ச்சித் துறையில் காணப்படுகிறது.
இதற்கு மென்பொருள் பொறியியல் துறை மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது.
இது 26% அதிகரித்து 4.9 பில்லியனாக உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் கூறுகிறது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வணிகச் செலவு ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பராமரிக்கப்பட்டு, 2023-24 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9% ஐ எட்டியுள்ளது.