Online Dating எப்போதும் மகிழ்ச்சியான உறவுகளுக்கு வழிவகுக்காது என்று ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
50 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆன்லைனில் சந்திக்கும் தம்பதிகள் குறைந்த திருப்தியைப் பெறுவதாகக் கண்டறிந்துள்ளது.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் நிபுணர்களின் பங்களிப்புடன், Wroclaw பல்கலைக்கழகத்தின் Marta Kowal தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆன்லைனில் சந்தித்த 6,500க்கும் மேற்பட்டவர்களில், உறவு திருப்தி, நெருக்கம் மற்றும் ஆர்வம் போன்ற குணங்களில் சரிவு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில், 2010 க்குப் பிறகு தங்கள் துணையைச் சந்தித்த தம்பதிகளில் 38% பேர் ஆன்லைனில் சந்தித்தனர். இது உலகளாவிய சராசரி 21% ஆக இருந்தது.
வயது, பாலினம், புவியியல் இருப்பிடம், கல்வி அல்லது பாலியல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்கள் ஆன்லைனில் சந்தித்தது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், ஆன்லைனில் தொடங்கப்படும் உறவுகளின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீண்டகால ஆய்வுகள் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.