ஆஸ்திரேலியாவில் சுமார் 40 நகரங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரிஸ்பேர்ணில் மட்டும் 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
காசா பகுதியில் முதன்முதலில் பஞ்சம் அறிவிக்கப்பட்ட பிறகு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவைக் காட்ட நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் போராட்டங்களில் திரண்டனர்.
பிரிஸ்பேர்ணின் Story பாலத்தின் குறுக்கே போராட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், குயின்ஸ் கார்டனில் சுமார் 7,000 பேர் கூடினர்.
மெல்பேர்ணில் உள்ள விக்டோரியன் மாநில நூலகத்தின் முன் ஒரு பெரிய குழு ஒன்று கூடி, “இஸ்ரேல் குழந்தைகளைக் கொல்கிறது” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் போராட்டங்கள் கான்பெரா, அடிலெய்டு, பெர்த் மற்றும் டார்வின் நகரங்களிலும் நடத்தப்பட்டன.