Caffeine கலந்த காபி குடிப்பதால் ஆயுட்காலம் அதிகரிப்பதாகவும், இதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாகவும் புதிய ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது.
Tufts பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்து, 1999 முதல் 2018 வரையிலான 46,000 பேரின் சுகாதாரப் பதிவுகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த தரவுகளை இந்த ஆய்வுக்காகப் பயன்படுத்தினர்.
காபி குடிக்காதவர்களை விட காபி குடிப்பவர்களுக்கு இறப்பு ஆபத்து 14% குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதில் உள்ள Antioxidants ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, மேலும் ஆயுட்காலம் அதிகரிப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
இருப்பினும், கூடுதல் சர்க்கரை மற்றும் பால் சேர்க்கப்படும்போது இந்த தரமான நன்மைகள் குறைந்துவிடும்.
ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் காபி வரை, சர்க்கரையுடன் அல்லது இல்லாமல் குடிப்பவர்களுக்கு, இறப்பு ஆபத்து 16% அதிகரித்துள்ளது என்றும், 2 முதல் 3 கப் காபி வரை குடிப்பவர்களுக்கு இறப்பு ஆபத்து 17% அதிகரித்துள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.