சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அவுஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ”சிறப்பான நாளில் ஒரு சிறப்பான தொடக்கம். ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு தொடக்கத்தை கொண்டிருக்கும்.
IPL வீரராக எனது நேரம் முடிவுக்கு வருகிறது. ஆனால், பல்வேறு League போட்டிகளில் விளையாடுவதற்கான நேரம் தொடங்கியுள்ளது. அனைத்து அழகான நினைவுகள் மற்றும் எனக்கு வாய்ப்பளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் IPL நிர்வாகங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.