அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த வரிகள் குறித்து அவுஸ்திரேலிய வர்த்தக மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வர்த்தக அமைச்சர் Don Farell, இந்தியாவுடன் வலுவான இருதரப்பு வைக்க ஒப்பந்தம் உருவாக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவை ‘dead economy’ (உயிரற்ற பொருளாதாரம்) என ட்ரம்ப் விமர்சித்ததற்கு பதிலளித்த அவர், இந்தியா ‘அருமையான வாய்ப்புகள்’ கொண்ட நாடு என புகழ்ந்துள்ளார்.
அவுஸ்திரேலியா இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
குயின்ஸ்லாந்தில் சுரங்க தொழில் மற்றும் இந்தியாவிற்கு யுரேனியன் ஏற்றுமதி ஆகியவற்றில் அதானி குழுமத்தின் முதலீடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
2030-க்குள் இந்தியாவில் 900 மில்லியன் நடுத்தர வர்க்க மக்கள் உருவாகும் எனபதால், உயர்தர உணவுப் பொருட்கள் மற்றும் மது ஆகியவற்றிற்கு தேவை அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவிடம் அதிகமாக உள்ள கனிமங்கள் மற்றும் Rare Earths வளங்கள், இந்தியாவிற்கு தேவைப்படும். அதனால், இந்தியாவுடன் இணைந்து விநியோக சங்கிலியை மேம்படுத்த அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயிலுடன் Zoom வழியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விரைவில் CECA ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.