கடந்த April இல் சிறப்பாக நடைபெற்ற Laughing கோ Laughing 2025 -Melbourne நிகழ்வின் மூலம் திரட்டப்பட்ட $ 23,500 நிதியில் சிவனருள் இல்ல அறக்கட்டளை இலங்கை மன்னாரில் நடாத்தி வரும் Boys home இல் நீண்டகாலமாக அடிப்படை தேவையாக இருந்த மலசலகூட வசதிகளை அமைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு, மிகச்சிறந்த முறையில் அத்தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக 14 மலசலகூடங்கள் மற்றும் ஆண்களுக்கான சிறுநீர்கலங்களையும்அமைக்க ஏறக்குறைய 4.5 மில்லியன் ரூபாய்
செலவு செய்யப்பட்டது.
மேலும் மெல்பேர்ண் ரசிகர்கள், நிகழ்வின் அனுசரணையாளர்கள், நலன்விரும்பிகள் , தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் Dr. JJ இன் விசிறிகள் அனைவருக்கும் அன்புகலந்த நன்றிகளை தெரிவித்தனர்.
உங்கள் ஆதரவு இல்லக் குழந்தைகளின் நீண்டகாலத் தேவையொன்றை நிறைவு செய்திருக்கி்ன்றது என்று ஆத்ம திருப்தியான செய்தியை உங்களிடம் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி என்றும் கூறினர்.
