விக்டோரியா மாநிலத்தில் பலத்த காற்று வீசுவதால் ஏற்படக்கூடிய மின் தடை மற்றும் சொத்து சேதங்களுக்கு மக்கள் தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம், மணிக்கு 100 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசும் என மாநிலம் தழுவிய வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது, மேலும் ஆல்பைன் பகுதிகளுக்கு பனிப்புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.
மரங்கள் விழுந்தும், மின் கம்பிகள் சாய்ந்தும் ஏற்கனவே பல விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதன் விளைவாக, விக்டோரிய மக்கள் அனைத்து மின் சாதனங்களையும் சார்ஜ் செய்து, முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று தென்மேற்கிலிருந்து விக்டோரியாவுக்குள் நுழையும் பலத்த காற்று மற்றும் மழை மறுநாள் காலை வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் மூத்த வானிலை ஆய்வாளர் Kristy Turner கூறுகிறார்.
அனைத்து அவசர சேவைகளும் 24 மணி நேரமும் இயங்கும், மேலும் உதவி தேவைப்படும் எவரும் அவசர சேவைகளை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.