பிரபல அமெரிக்க மருந்து மற்றும் ஊட்டச்சத்து supplements நிறுவனமான iHerb, ஆஸ்திரேலியாவிற்கு melatonin supplements-ஐ ஏற்றுமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
Melatonin என்பது ஆஸ்திரேலியாவில் இளம் குழந்தைகளிடையே பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தூக்க உதவி மருந்து ஆகும்.
பெற்றோரின் வசதிக்காக குழந்தைகளுக்கு அதிக அளவு Melatonin கொடுக்கப்படுவதாக வந்த செய்திகள் தான் ஆஸ்திரேலியாவுக்கான விற்பனையை நிறுத்தி வைத்ததற்கான காரணம் என்று iHerb கூறுகிறது.
ஆஸ்திரேலியாவில் Melatonin மருந்துச் சீட்டு மூலம் மட்டுமே கிடைக்கும் என்றாலும், iHer வலைத்தளம் மூலம் Melatonin கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்புகள் மற்றும் பல்வேறு சாக்லேட்டுகளை நீங்கள் எளிதாக வாங்கலாம்.
இந்த ஆண்டு இதுவரை, Melatonin அளவுக்கு அதிகமாக உட்கொண்ட 322 வழக்குகள் பதிவாகியுள்ளன.
வாடிக்கையாளர் பாதுகாப்பே தனது முன்னுரிமை என்றும், நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் செயல்படுவதை உறுதி செய்வதே தங்கள் குறிக்கோள் என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
