மக்கள் Pepper Spray-ஐ பயன்படுத்த அனுமதிப்பது வீட்டு வன்முறைக்கான மற்றொரு கருவியாக மாறும் என்ற கவலைகள் உள்ளன.
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், மக்கள் தற்காப்புக்காக Pepper Spray-ஐ சட்டப்பூர்வமாக வாங்கிப் பயன்படுத்த அனுமதிக்கும் 12 மாத முன்னோடித் திட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த முன்மொழிவு சுகாதார மற்றும் வீட்டு வன்முறை நிபுணர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் திறந்த கடிதத்தில் 21 அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம், வடக்குப் பிரதேச குடியிருப்பாளர்கள் உரிமம் பெற்ற துப்பாக்கிக் கடைகளில் இருந்து Pepper Spray-ஐ சட்டப்பூர்வமாக வாங்க முடியும்.
இதற்கிடையில், அவர்களின் பாதுகாப்பிற்கான சட்ட கருவிகளை வழங்குவதன் மூலம் தனிப்பட்ட பாதுகாப்பை மேம்படுத்துவதாக அரசாங்கம் கூறுகிறது.
குடும்ப வன்முறை தடுப்பு அமைச்சர் ராபின் காஹில், Pepper Spray என்பது DV ஆபத்தில் உள்ளவர்கள் தங்கள் உடைமையில் வைத்திருக்கக்கூடிய ஒரு பாதுகாப்பான கருவி என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், இந்த கருவி வீட்டு வன்முறை தாக்குதல்களை அதிகப்படுத்துகிறது மற்றும் பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பை வழங்காது என்று DV நிபுணர்கள் கூறுகின்றனர்.