சிட்னி மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் படுக்கைகள் இல்லாததால், ஒரு பெண் சோபாவில் பிரசவித்துள்ளார்.
ஜூலை 31 ஆம் திகதி தனது நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டதால், பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பெண் வெஸ்ட்மீட் மருத்துவமனைக்குச் சென்றார்.
Westmead-இல் தானும் தன் கணவரும் ஒரு நடைபாதையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவள் கூறுகிறாள்.
அவளுக்குப் பிரசவ வலி தொடங்கியபோது உடனெடியாக சோபாவிலேயே பிரசவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிரசவத்திற்குப் பிறகும், படுக்கைகள் கிடைக்கவில்லை என்றும், இறுதியில் மகளிர் மருத்துவப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் அந்தப் பெண் கூறுகிறார்.