மெல்போர்னில் உள்ள Princes Freeway-இன் ஒரு பாதையைத் தவிர மற்ற அனைத்தும் Clyde சாலை நுழைவாயிலுக்கு அருகே பல வாகனங்கள் மோதியதைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
காவல்துறையினர் பின்தொடர்ந்த பிறகு வாகனங்கள் மோதிக்கொண்டன. மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால், வாகன ஓட்டிகள் பெரும் தாமதத்தை எதிர்கொள்கின்றனர்.
போக்குவரத்துக்கு திறந்திருக்கும் பாதையில் மணிக்கு 40 கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் வாகனங்கள் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், Freeway-இற்கு மாற்றாக Princes நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறு ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.