ஆஸ்திரேலியாவில் பெர்ரிகளின் நுகர்வு அதிகரித்து வருவதால், பழ உற்பத்தியாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பூச்சிக்கொல்லியின் பாதுகாப்பு மதிப்பாய்வு தொடங்கியுள்ளது.
அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கத்துடன், ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகள் ஆரோக்கியமான உணவுமுறைகளின் ஒரு பகுதியாக குடும்பங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக மாறிவிட்டன.
ஆனால் அவற்றின் பிரபலத்திற்கு மத்தியில், தேசிய பண்ணை இரசாயன ஒழுங்குமுறை அமைப்பான ஆஸ்திரேலிய பூச்சிக்கொல்லிகள் மற்றும் கால்நடை மருந்துகள் ஆணையம் (APVMA) dimethoate-இன் பயன்பாடு குறித்து புதிய கட்டுப்பாடுகளை முன்மொழிந்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் பரவலாக காணப்படும் பழ ஈ லார்வாக்களைக் கொல்ல விவசாயிகள் இந்த பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த மாற்றங்கள் பூச்சியைக் கட்டுப்படுத்துவதை மிகவும் கடினமாக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
விவசாயிகள் தங்கள் பழங்களைத் தெளிப்பதற்கும் அவற்றைப் பறிப்பதற்கும் இடையிலான நேரத்தை 14 நாட்களாக நீட்டிக்க முயல்கிறது.
டைமெத்தோயேட்டின் மற்ற அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பயன்பாடுகளும் பாதுகாப்பானவை என்றும், blueberries, raspberries அல்லது blackberriesகளில் பயன்படுத்தப்படும் வேறு எந்த இரசாயனங்களுக்கும் ஒழுங்குமுறை நடவடிக்கை தேவையில்லை என்றும் APVMA கூறுகிறது.
இந்த வாரம் சமர்ப்பிப்புகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, டைமெத்தோயேட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து APVMA இந்த மாத இறுதியில் முடிவெடுக்கும்.