நியூ சவுத் வேல்ஸ் Hunter பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வீட்டில் நாய் தாக்கியதில் பதின்ம வயது பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
காலை 11:30 மணியளவில் Broughton தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. அங்கு 16 வயது சிறுமியின் தலை, கழுத்து மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருப்பதைக் கண்டனர்.
Newcastle’s John Hunter மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு, சம்பவ இடத்திலேயே அவருக்கு துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
உதவி கேட்டு கூப்பிட்டபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் சிறுமியை நாயிடம் இருந்து காப்பாற்றியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலால் குறித்த சமூகம் அதிர்ச்சியடைந்ததாக Singleton மேயர் Sue Moore தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.