இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பகுதியில் சுமார் 21,000 சிறுவர்கள் இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இஸ்ரேலிய தாக்குதலால் 40,500 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதோடு, அவர்களில் பலர் கேட்கும், பேசும், பார்க்கும் திறன்களைக் கூட இழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக, 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 1.32 இலட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 63,700 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,61,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.