Tesla நிறுவனர் எலோன் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை Tesla வெளியிட்ட ஆவணத்தின்படி, அவரது மின்சார கார் நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளில் அதன் திட்டமிடப்பட்ட இலக்குகளை எட்டினால், அவருக்கு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக கிடைக்கும்.
இந்த இலக்குகளில் வாகன உற்பத்தி, நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பை அதிகரித்தல் மற்றும் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
ஏற்கனவே உலகின் மிகப் பெரிய பணக்காரரான மஸ்க், ஒரு டிரில்லியன் டாலர் இலக்கைக் கடக்க, டெஸ்லா 2 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை அடைய வேண்டும் மற்றும் வாகன விநியோகங்களை 20 மில்லியனாக வளர்க்க வேண்டும்.
Forbes பத்திரிகையின்படி, மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 400 பில்லியன் டாலர்கள்.
இருப்பினும், இந்த ஆண்டு மட்டும் டெஸ்லாவின் பங்கு விலை 25% சரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மஸ்க்கின் அரசியல் தொடர்புகள் பரவலான விமர்சனங்களுக்கு வழிவகுத்தன.