ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 99,763 ஐ எட்டியுள்ளது.
செப்டம்பர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஜப்பானிய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்த எண்ணிக்கையில் 90% பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் வயதான பெண்மணி தற்போது 114 வயதான ஷிகேகோ ககாவா ஆவார்.
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான், வயதான மக்கள் தொகை காரணமாக அதிகரித்து வரும் நலன்புரி செலவுகளையும் தொழிலாளர் பற்றாக்குறையையும் எதிர்கொள்கிறது.