Newsலண்டனில் புலம் பெயர்ந்தோருக்கு எதிராக பாரிய பேரணி

லண்டனில் புலம் பெயர்ந்தோருக்கு எதிராக பாரிய பேரணி

-

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகர் லண்டனில் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.

தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த இந்த பேரணியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியில் ஈடுபட்ட சிலர், பொலிஸார் மீது தாக்குதலும் நடத்தினர். கூட்டத்துக்குள் இருந்து பொலிஸார் மீது போத்தல்களை வீசியதில், 26 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அமைதியைச் சீர்குலைத்தல், வன்முறை, தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்

இந்நிலையில், லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மஸ்க் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது,

“வாக்காளர்களை இறக்குமதி செய்கிறார்கள். தங்கள் நாட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் மற்ற நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள். இது வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தி. இதை நிறுத்தவேண்டும்” என்று தெரிவித்தார்.

Latest news

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

ஆஸ்திரேலியாவில் இளைஞர்களை விட பெரியவர்களிடையே இருக்கும் அதிக போதை பழக்கம்

ஆஸ்திரேலியர்களில் வயதானவர்கள் தேசிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறி மது அருந்துவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் நலன்புரி நிறுவனத்தின் (AIHW) அறிக்கை, 50 மற்றும்...

ஜப்பானில் ஒரு தொழிற்சாலையில் நடந்த கத்திக்குத்தில் ஐந்து பேர் படுகாயம்

மத்திய ஜப்பானில் உள்ள ஒரு டயர் தொழிற்சாலையில் எட்டு பேர் கத்தியால் குத்தப்பட்டதாகவும், ஏழு பேர் எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய...

கிரேன் சரிந்து விழுந்ததில் 90 பேர் இடம்பெயர்வு

பலத்த காற்று காரணமாக கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சவுத்போர்ட்டில் உள்ள ஒரு கேரவன் பூங்காவில் 30 டன் எடையுள்ள கிரேன் சரிந்து விழுந்ததில் 90க்கும் மேற்பட்டோர்...

கிரேன் சரிந்து விழுந்ததில் 90 பேர் இடம்பெயர்வு

பலத்த காற்று காரணமாக கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சவுத்போர்ட்டில் உள்ள ஒரு கேரவன் பூங்காவில் 30 டன் எடையுள்ள கிரேன் சரிந்து விழுந்ததில் 90க்கும் மேற்பட்டோர்...

மெல்பேர்ண் காவல் நிலையத்தில் பெண்ணை தாக்கிய நபர்

மெல்பேர்ண் காவல் நிலையத்தில் ஒரு பெண்ணின் கையில் கத்தியால் குத்திய நபர் தப்பி ஓடிவிட்டார். நேற்று அதிகாலை 2:40 மணியளவில், Mahoneys மற்றும் Edgars சந்திப்பில் 32...