சார்லி கிர்க் படுகொலையை கொண்டாடியவர்களின் விசாவை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளதாவது, “எங்களின் குடிமகன் கொல்லப்பட்ட நிகழ்வை கொண்டாடிய வெளிநாட்டினரை ஏற்கவே முடியாது.
இப்படிப்பட்ட நபர்களை அமெரிக்கா வரவேற்காது. இதுபோன்ற கொலைகளை நியாயப்படுத்தும் அல்லது கொண்டாடும் நபர்களை அமெரிக்காவிற்குள் நுழையவோ அல்லது தங்கவோ அனுமதிக்கக்கூடாது.
இப்படி கொண்டாடுவர்கள் இங்கே (அமெரிக்கா) இருந்தால் அவர்களுக்கு நாம் விசா வழங்கக் கூடாது.
அவர்கள் ஏற்கனவே இங்கே இருந்தால் அவர்களின் விசாவை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.