Newsஅரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

-

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு’ உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த ஏறக்குறைய 60 இஸ்லாமிய நாடுகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எகிப்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள ‘அரபு நேட்டோ’ என்னும் பெயர், அரபு – முஸ்லிம் நாடுகளின் இராணுவத்தை ஒருங்கிணைத்து ஒரே குழுவாக மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே கடந்த 2015-இல், எகிப்து அரசால் முன்மொழியப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அரபு நாடுகளின் இராணுவ கூட்டமைப்பு, கடந்த வாரம் கட்டாரில் இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

இதற்கு பாகிஸ்தான், துருக்கி, ஈராக் உள்ளிட்ட இராணுவ பலம் வாய்ந்த முக்கிய முஸ்லிம் நாடுகள் ஆதரவுக்குரல் கொடுத்துள்ளன.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் ‘அரபு நேட்டோவின்’ தலைமையிடம் செயல்படலாம் என்றும், இப்படைகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை அரபு லீக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 22 உறுப்பினர் நாடுகளும் சுழற்சி முறையில் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் எகிப்து தரப்பிலிருந்து ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பிரான்ஸ் Louvre கொள்ளை தொடர்பாக ஐந்து புதிய சந்தேக நபர்கள் கைது

இந்த மாதம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த நகை திருட்டு தொடர்பாக பிரெஞ்சு போலீசார் ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர். அதில் ஒரு முக்கிய சந்தேக நபரும்...

WA நகரில் சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்த குழந்தை!

மேற்கு ஆஸ்திரேலிய நகரத்தில் ஒரு குழந்தையின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெர்த்திலிருந்து சுமார் 40 கி.மீ தெற்கே உள்ள பால்டிவிஸில் உள்ள ஒரு...

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதங்களை பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு, அமெரிக்க அதிபர்...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

சர்வதேச தரகராக அமெரிக்க நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்

39 வயதான ஆஸ்திரேலியரான பீட்டர் வில்லியம்ஸ், ரஷ்யாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ரகசியங்களை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளின்படி, வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க பாதுகாப்பு...