Newsபிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி ஒரு ஆணா?

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி ஒரு ஆணா?

-

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த பிரிஜிட்டை (72 வயது) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இமானுவேல் மக்ரோன் ஒரு மாணவராக இருந்தபோது அவரது மனைவி பிரிஜிட் மக்ரோன் பாடசாலை ஆசிரியையாக இருந்தார். இதற்கிடையே மக்ரோன் ஒரு வினோதமான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார்.

அவர் தனது மனைவி ஒரு ஆண் அல்ல பெண் தான் என அமெரிக்க நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்ரோன் உடைய மனைவியும் பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மக்ரோன் ஒரு காலத்தில் ஆணாக இருந்ததாகவும், பாலின மாற்றத்திற்கு உட்பட்டு பெண்ணாக மாறியதாகவும் வெளியான கருத்துக்கள் 2017ஆம் ஆண்டு முதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடாஷா ரே என்பவர் வெளியிட்ட யூடியூப் காணொளியில் பிரிஜிட் மக்ரோனின் உண்மையான பெயர் ஜீன்-மைக்கேல் ட்ரோக்னக்ஸ் என்று கூறினார்.

மேலும் பிரிஜிட் உடைய சகோதரனின் புகைப்படம் என்று நம்பப்படும் ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒப்பிட்டு இருவரும் வெவ்வேறு ஆட்கள் இல்லை, இருவரும் ஒரே நபர் தான் எனவும் காணொளியில் நடாஷா கூறியிருந்தார்.

இதுதொடர்பான பிரான்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, நாடாஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் அந்த உத்தரவு இரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே, அமெரிக்க தீவிர வலதுசாரி அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ் பிரிஜிட் மக்ரோன் ஒரு ஆண் என்று பேசி வந்தார்.

அவருக்கு எதிராக மக்ரோன் தம்பதியினர் அமெரிக்க நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தனர்.

வழக்கின் ஒரு பகுதியாக, பிரிஜிட் மக்ரோன் கர்ப்பம் தரித்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிற அறிவியல் ஆதாரங்களை அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக மக்ரோனின் வழக்கறிஞர் டாம் கிளேர் தற்போது தெரிவித்துள்ளார்.

Latest news

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட காமன்வெல்த் வங்கி

காமன்வெல்த் வங்கி சேவைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். நேற்று திட்டமிடப்பட்டிருந்த பராமரிப்புப் பணிகள் எதிர்பார்த்ததை விட நீண்டதாக இருந்ததால் வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அதன்படி, காமன்வெல்த் வங்கி...

பல ஆஸ்திரேலிய மாநிலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

பல ஆஸ்திரேலிய மாநிலங்களில் பெரிய ஆலங்கட்டி மழை மற்றும் ஆபத்தான காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் முதல் தெற்கு குயின்ஸ்லாந்திலிருந்து...

எய்ட்ஸ் இல்லாத ஆஸ்திரேலியாவில் பாலியல் தொழிலாளர்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு பாலியல் தொழிலாளர்களில் பெரும்பாலோர் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஒரு கணக்கெடுப்பின்படி, ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு பாலியல் தொழிலாளர்களின் விகிதம் சுமார் 15-20%...

Heathrow உட்பட ஐரோப்பாவின் சிறந்த விமான நிலையங்களில் குழப்பம்

ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிலையங்களில் check-in மற்றும் boarding அமைப்புகளை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் விமானப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், விமானப் பயணங்களில்...

உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ள உயிர்களைக் காப்பாற்றிய ‘000’

Triple Zero-இற்கான அழைப்புகள் தடுக்கப்பட்ட பின்னர் நான்காவது மரணம் பதிவாகியுள்ளது. ஆப்டஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மூன்று மாநிலங்களில் Triple Zero அவசர அழைப்பு மையம் 13...

பயணிகளிடையே குறைந்துவரும் Myki அட்டை பயன்பாடு

மெல்பேர்ணில் பேருந்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் Myki அட்டையைப் பயன்படுத்தும் போக்கு மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆவணம், நான்கில் ஒருவர்...