Newsவிசா கட்டணங்களை இரத்து செய்யும் முயற்சியில் பிரித்தானியா

விசா கட்டணங்களை இரத்து செய்யும் முயற்சியில் பிரித்தானியா

-

திறமையானவர்களுக்கான விசா கட்டணங்களை இரத்து செய்வது குறித்து பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா குடியேற்றவிசா குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் இது தொடர்பில் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உலகின் சிறந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் டிஜிட்டல் நிபுணர்களை பிரித்தானியாவுக்குள் ஈர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக மேற்படி திட்டத்தை பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய உலகின் முதல் ஐந்து பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் அல்லது மதிப்புமிக்க பரிசுகளை வென்றவர்களுக்கான விசா செலவுகளை பூஜ்ஜியமாகக் குறைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக ட்ரம்ப் நிர்வாகமானது H-1B விசாதாரர்களுக்கான கட்டணத்தை 1 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்தியது. இதனால் அங்கு கல்வி கற்று தொழிலை பெறலாம் என எதிர்பார்த்திருந்த வெளிநாட்டு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆகவே தற்போது பிரித்தானிய முன்னெடுக்கும் இந்த திட்டம் கைகொடுத்தால் அமெரிக்கா செல்ல நினைத்த மாணவர், தொழிலாளர் குழுக்கள் பிரித்தானியாவிற்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது. இது பிரித்தானியாவின் பொருளாதாரத்தையும் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...