பாலியில் இறந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட குயின்ஸ்லாந்து நபரின் இதயம் அகற்றப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கடந்த மே மாதம் 23 வயதான குறித்த நபர் பாலி தீவுகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
அவர் தங்கியிருந்த ரிசார்ட்டின் நீச்சல் குளத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
குடும்ப உறுப்பினர்கள் விசாரணை நடத்த வலியுறுத்தி வருவதால், இளைஞனின் உடலை நூசாவிற்கு கொண்டு வருவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் உடல் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டபோது, குயின்ஸ்லாந்து மரண விசாரணை அதிகாரியால் நடத்தப்பட்ட இரண்டாவது பிரேத பரிசோதனையில் அவரது இதயம் காணாமல் போனது தெரியவந்தது.
அவரது இதயம் பாலி மருத்துவமனையில் வைக்கப்பட்டு, அவர் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டதாக அவரது தாயார் கூறுகிறார்.
சடலத்திலிருந்து இதயம் ஏன் அகற்றப்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், மரணத்திற்கான சரியான காரணத்தைக் குறிக்கும் பாலி பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வழங்கப்படவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.