முதியோர் பராமரிப்பு மையத்தில் வசிக்கும் நான்கு முதியவர்களிடமிருந்து வங்கித் தகவல்களைப் பெற்றதற்காக ஒரு இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த 23 வயது பெண் Rothwell ஊனமுற்றோர் மற்றும் மூத்த நகர்ப்புற பராமரிப்பு மையத்தில் பணிபுரிபவர்.
மே 2024 முதல் ஜூன் 2025 வரை தனிப்பட்ட பரிவர்த்தனைகள் மற்றும் கொள்முதல்களைச் செய்ய அவர் பெற்ற வங்கித் தகவலைப் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
Redcliffe குற்றப் புலனாய்வுப் பிரிவு அந்த இளம் பெண் மீது 110 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
இதில் ஒரு வீட்டிற்குள் புகுந்து, மற்றொருவரின் அடையாளத்தைத் திருடுவது, பணத்தைத் திருடுவது, பணியிடத்தில் மக்களை ஏமாற்றுவது, பணத்தை மோசடி செய்வது ஆகியவை அடங்கும்.
சமூகத்தில் வயதானவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பயன்படுத்திக் கொள்வது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காவல்துறைத் தலைமை ஆய்வாளர் Lisa Elkins கூறினார்.
சம்பந்தப்பட்ட இளம் பெண் செப்டம்பர் 24 ஆம் திகதி Redcliffe மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.