ஆஸ்திரேலியாவிற்கு வரும் புதிய குடியிருப்பாளர்களுக்கு ஓட்டுநர் சட்டங்கள் குறித்த புரிதலை வழங்க Fit to Drive Foundation நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சாலை விதிகள் பெரும்பாலும் வெளிநாட்டினருக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
Hook turns, wombat crossings, மற்றும் school zones போன்ற சிறப்பு விதிகள் புதிய குடியிருப்பாளர்கள் வாகனம் ஓட்டும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அடங்கும்.
ஆஸ்திரேலிய சாலைச் சட்டங்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்காக, கலாச்சார ரீதியாகவும் மொழியியல் ரீதியாகவும் வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்த அறக்கட்டளை பட்டறைகளை நடத்துகிறது.
Hook turns, U-turns, crest/dip sign போன்ற விதிகள் எளிமையான சொற்களில் விளக்கப்பட்டுள்ளன. மேலும் கங்காரு அல்லது wombat தாக்குவதால் ஏற்படும் சேதங்களும் விளக்கப்பட்டுள்ளன.
பைக்குகள், இ-பைக்குகள், இ-ஸ்கூட்டர்கள், பேட்டரி சார்ஜிங் விதிகள், பாதசாரிகள் கடக்கும் இடங்கள் மற்றும் வழியின் உரிமை தொடர்பான பாதுகாப்பு குறித்த தகவல்களையும் இந்தப் பட்டறைகள் வழங்கும்.
வெளிநாட்டினரிடையே காவல்துறை மீது நம்பிக்கையை வளர்க்கும் பட்டறைகளிலும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று Fit to Drive Foundation கூறுகிறது.