Melbourneமெல்பேர்ணில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா

மெல்பேர்ணில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா

-

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா, மெல்பேர்ண் மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியிடப்பட உள்ளது.

“தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்”, “ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும்”, “முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்”“தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்”, “இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும்” ஆகிய
ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீடு எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

வலென் மத்திய கலை மண்டபம், வெர்மான்ட் மேல்நிலைக் கல்லூரி, 27-63 மொராக் சாலை, வெர்மான்ட், விக்டோரியா 3133. (Fallon Centre Auditorium,Vermont Secondary College, 27-63 Morack Road, Vermont VIC 3133) எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் மாலை 1600 முதல் 1900 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வு திரு. திரு. பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் அறிமுக உரையை திரு. ரமேஷ் பாலா அவர்கள் உரையாற்றுவார். அத்துடன் நூல்களின் ஆய்வுரைகளை மெல்பேர்ண் இலக்கிய ஆர்வலர்கள் வழங்குவார்கள். தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள் எனும் நூலுக்கு திரு. ராஜா கருப்பையா அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார்.

ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும் என்ற நூலை திருமதி. நித்யா தர்மசீலன் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார். முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள் குறித்த நூல் ஆய்வை திரு. ஜூட் பிரகாஷ் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார்.

இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூல் குறித்த ஆய்வை திரு. ருத்ராபதி அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார். அத்துடன் இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள் பற்றிய நூலாய்வை திரு. ஆவூரான் சந்திரன் அவர்கள் நிகழ்த்துவார்.

மேலும் தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும் என்ற நூலை திரு. கிறிஷ்டி நல்லரட்ணம் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார்.

அத்துடன் இந்நிகழ்வில் சிறப்புரையை மெல்பேர்ண் புகழ் சட்டத்தரணி திரு. ரவிந்திரன் அவர்களும் உரையாற்றுவார். மெல்பேர்ண் மாநகரில் நிகழும் இந்நூல் வெளியீட்டின் ஏற்புரையை நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்துவார்.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...