சிட்னியில் இருந்து நியூசிலாந்துக்குச் சென்ற போயிங் 737 Qantas விமானத்தில் ஏற்பட்ட அவசரநிலை காரணமாக Mayday அழைப்பு வந்துள்ளது.
விமானத்தில் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருந்ததால், விமானி Mayday அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தின் சரக்குப் பிரிவில் தீ எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு ஆபத்தான சூழ்நிலையாகக் கருதி விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த சூழ்நிலை காரணமாக, ஆக்லாந்து விமான நிலையத்தில் பல அவசர சேவைகள் தயார் நிலையில் இருந்தன. மேலும் 16 தீயணைப்பு வாகனங்கள் கொண்ட சிறப்பு பேரிடர் சேவைகளும் வரவழைக்கப்பட்டன.
காலை 11.05 மணியளவில் விமானம் ஆக்லாந்து விமான நிலையத்தை பாதுகாப்பாக அடைந்ததாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர். அவர்கள் பாதுகாப்பாக விமான நிலையத்தை அடைந்துவிட்டனர்.